spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாமிரட்டும் ஜெயம் ரவியின் 'சைரன்' பட டிரைலர்!

மிரட்டும் ஜெயம் ரவியின் ‘சைரன்’ பட டிரைலர்!

-

- Advertisement -

ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள சைரன் படத்தின் மிரட்டலான ட்ரெய்லர் வெளியாகி உள்ளது.

மிரட்டும் ஜெயம் ரவியின் 'சைரன்' பட டிரைலர்!ஜெயம் ரவி நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் தான் சைரன். இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். இதில் போலீஸ் அதிகாரியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் இணைந்து சமுத்திரக்கனி, யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஹோம் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. ஜிவி பிரகாஷ் இதற்கு இசையமைத்துள்ளார். ஆக்ஷன் திரில்லர் படமாக இப்படம் உருவாகியுள்ளது. சமீபத்தில் படத்தின் முதல் இரண்டு பாடல்களும் வெளியாகி கவனம் பெற்றது. ஏற்கனவே படத்தின் டீசர் வெளியான நிலையில் நேற்று சைரன் படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

we-r-hiring

இந்த ட்ரெய்லரில் ஜெயம் ரவிக்கு வில்லியாக கீர்த்தி சுரேஷ் காட்டப்படுகிறார். இருவருக்கும் இடையிலான காட்சிகள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது. மேலும் படத்தில் காதல், சென்டிமென்ட், ஆக்சன் என அனைத்தும் கலந்திருக்கும் என தெரியவந்துள்ளது.

ஜெயம் ரவி செய்யாத கொலைக்காக 16 வருடங்கள் ஜெயில் தண்டனை அனுபவித்து வந்த பிறகு, அவரின் மகள் அவரை வெறுக்கிறார். எதற்காக ஜெயம் ரவி ஜெயிலுக்கு சென்றார். ஜெயிலில் இருந்து வந்த பிறகும் கீர்த்தி சுரேஷ் ஏன் ஜெயம் ரவியை துரத்துகிறார் என்பது தான் படத்தின் கதை. மேலும் இப்படம் வருகின்ற பிப்ரவரி 16 வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ