Homeசெய்திகள்சினிமாமுதலைச்சர் கதாபாத்திரத்தில் நடிக்கும் ஜீவா… என்ன படம் தெரியுமா?

முதலைச்சர் கதாபாத்திரத்தில் நடிக்கும் ஜீவா… என்ன படம் தெரியுமா?

-

மறைந்த முன்னாள் ஆந்திர முதல்வர் ஒய்எஸ் ராஜசேகர ரெட்டி அவர்களின் வாழ்க்கை வரலாற்றை தழுவி ‘யாத்ரா’ எனும் மலையாள திரைப்படம் உருவாகி இருந்தது. இந்த படத்தில் மம்முட்டி ஒய் எஸ் ராஜசேகர் ரெட்டியாக நடித்திருந்தார்.

இப்படத்தை 70mm என்டேர்டைன்மென்ட் தயாரிப்பில் மஹி வி ராகவ் இயக்கியிருந்தார். இப்படம் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.

தற்போது யாத்ரா படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருக்கிறது. இந்த படத்தையும் மஹி வி ராகவ் தான் இயக்கவுள்ளார்.

இதில் ஒய் எஸ் ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன்மோகன் ரெட்டி வாழ்க்கை திரைப்படமாக உருவாகிறது. இந்தப் படத்தில் ஜெகன் மோகன் ஆக ஜீவா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு வருகின்ற ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கி ஆந்திர மாநில சட்டமன்றத் தேர்தலின் பிரச்சார சமயத்தில் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது.
எனினும் இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ