spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாமுதலமைச்சராகவே மாறிப்போன நடிகர் ஜீவா... அசத்தல் யாத்ரா 2 டீசர்....

முதலமைச்சராகவே மாறிப்போன நடிகர் ஜீவா… அசத்தல் யாத்ரா 2 டீசர்….

-

- Advertisement -
யாத்ரா 2 படத்தின் டீசர் சமூக வலைதளங்களில் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.

ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகி உள்ளது. தெலுங்கில் இந்த படத்தை எடுத்துள்ளனர். இயக்குநர் மஹி வி ராகவ் இத்திரைப்படத்தி இயக்கி இருக்கிறார். இவர் இதற்கு முன்பாக ஜெகன் மோகன் ரெட்டியின் அப்பாவாவும், மறைந்த ஆந்திர முதல்வருமான ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக உருவாக்கி வெளியிட்டு அதில் வெற்றியும் கண்டார். இத்திரைப்படம் தெலுங்கு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. யாத்ரா என்ற தலைப்பில் கடந்த 2019-ம் ஆண்டு இப்படம் வெளியானது. இதில் மம்மூட்டி நடித்திருந்தார்.

we-r-hiring
இரண்டாம் பாகத்தில் பொறுத்தவரை ஒய்.எஸ்.ராஜசேகர் ரெட்டியின் மகனும், ஆந்திராவின் தற்போதைய முதல்வருமான ஜெகன் மோகன் ரெட்டியின் அரசியல் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகி வருகிறது. இதில், ஜெகன் மோகன் ரெட்டியாக பிரபல தமிழ் நடிகர் ஜீவா நடிக்கிறார். முந்தைய பாகத்தில் ஒய்.எஸ்.ஆர் கதாபாத்திரத்தில் நடித்த மம்மூட்டி இந்த பாகத்திலும் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கியது. படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 8-ம் தேதி திரையரங்குகளில் வௌியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் டீசரை படக்குழு தற்போது வௌியிட்டுள்ளது. மாறுபட்ட வேடத்தில் அசத்தலாக ஜீவா நடித்துள்ள இப்படத்தின் டீசர் சமூக வலைதளங்களில் வெளியாகி டிரெண்டாகி வருகிறது.

MUST READ