நடிகர் ஜீவாவின் அகத்தியா திரைப்படம் சன் நெக்ஸ்டில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜீவா நடிப்பில் கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி அகத்தியா திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் ஜீவாவிற்கு ஜோடியாக ராஷி கன்னா நடித்திருந்தார்.இதில் மற்றுமொரு கதாநாயகனாக அர்ஜுன் நடித்திருந்தார். மேலும் இவர்களுடன் இணைந்து செந்தில், சார்லி, ரோகினி, ராதா ரவி, நிழல்கள் ரவி மற்றும் பலர் நடித்திருந்தனர். சித்த மருத்துவம் சம்பந்தமான கதைக்களத்தில் ஹாரர் ஜானரில் இப்படம் உருவாகியிருந்தது. அதன்படி மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் ஓரளவிற்கு நல்ல வரவேற்பை பெற்றது. அதாவது இப்படம் 1940 காலகட்டத்திலும், தற்போது நடப்பது போலவும் எடுக்கப்பட்டிருந்தது. இதன் திரைக்கதை சுவாரஸ்யமாக நகர்ந்தாலும் படத்தின் இறுதியில் இடம் பெற்ற கிராபிக்ஸ் சண்டைக்காட்சி ரசிகர்களை திருப்தி படுத்தவில்லை. இந்நிலையில் இந்த படம் வருகின்ற மார்ச் 28ஆம் தேதி சன் நெக்ஸ்டில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அகத்தியா திரைப்படத்தின் பா. விஜய் இயக்க வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்திருந்தது. யுவன் சங்கர் ராஜா இதற்கு இசையமைத்திருந்தார். தீபக் குமார் பதி இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.