spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா'ஆசிரியரைப் போல் என்னை ஊக்குவித்ததற்கு நன்றி'...... அஜித் குறித்து ஜான் கொக்கேன்!

‘ஆசிரியரைப் போல் என்னை ஊக்குவித்ததற்கு நன்றி’…… அஜித் குறித்து ஜான் கொக்கேன்!

-

- Advertisement -

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு நடிகர் அஜித் பற்றி ஜான் கொக்கேன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஆசிரியர்கள் என்பவர்கள் மாணவர்களுக்கு நல்ல வழிகாட்டியாகவும், அவர்கள் உயரத்திற்கு செல்ல ஊக்குவிப்பாளராகவும் திகழ்பவர்கள். அவர்களை கௌரவிக்கும் விதமாக வகையில் நாடு முழுவதும் செப்டம்பர் 5ஆம் தேதி ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் திரையுலக பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

we-r-hiring

இந்நிலையில் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு நடிகர் ஜான் கொக்கேன் தனது சமூக வலைதள பக்கத்தில், “கடவுள் எல்லா இடங்களிலும் இருக்க முடியாது என்பதற்காக நமக்கு ஆசிரியர்களை கொடுத்திருக்கிறார். நாம் நம் வாழ்வில் முன்னேறவும்
நல்வழியில் செல்லவும் ஆசிரியர்கள் உறுதுணையாக இருக்கிறார்கள். எனக்கு அதுபோல நடிகர் அஜித்குமார் சார் இருக்கிறார். எனக்கு மட்டும் இல்லாமல் கோடிக்கணக்கானவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கிறார். நான் நினைத்துக் கூட பார்க்க முடியாத பல விஷயங்களை செய்ய என்னை ஊக்குவித்ததற்கும் நன்றி. நான் உங்களை மிகவும் நேசிக்கிறேன் சார்” இன்று நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஜான் கொக்கேன் துணிவு படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ