ஜெயம் ரவியின் 30வது படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.
ஜெயம் ரவி தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் எம் ராஜேஷ் இயக்கத்தில் JR 30 திரைப்படத்தில் நடிக்கிறார். இதில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். ஸ்கிரீன் சீன் மீடியா நிறுவனத்தின் தயாரிப்பிலும் ஹாரிஸ் ஜெயராஜ் இசையிலும் இப்படம் உருவாகி வருகிறது.சமீபத்தில் தான் படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்தன. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் கடந்த செப்டம்பர் 10ஆம் தேதி ஜெயம் ரவியின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் தற்போது விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியாக இருப்பதாக தெரிய வந்துள்ளது. அதன்படி JR 30 படத்தின் முக்கிய அறிவிப்பு நாளை வெளியாகும் என படக் குழுவினர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளனர்.


