Homeசெய்திகள்சினிமாஹெச்.வினோத்- கமல்ஹாசன் கூட்டணியின் புதிய படம்... லேட்டஸ்ட் அப்டேட்!

ஹெச்.வினோத்- கமல்ஹாசன் கூட்டணியின் புதிய படம்… லேட்டஸ்ட் அப்டேட்!

-

ஹெச்.வினோத்- கமல்ஹாசன் கூட்டணியில் உருவாக இருக்கும் புதிய படம் குறித்த அப்டேட் கிடைத்துள்ளது.

நடிகர் கமல்ஹாசன் தற்போது ஷங்கர் இயக்கத்தில் ‘இந்தியன் 2’ படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் தென்னாப்பிரிக்காவில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. தற்போது படக்குழுவினர் சென்னை திரும்பியுள்ளனர்.

மே மாதம் இந்தப் படத்தின் கிளைமேக்ஸ் காட்சிகள் படமாக்கப்பட இருக்கின்றன. இந்தப் படத்தை அடுத்து மணிரத்னம் இயக்கத்தில் உருவாக இருக்கும் புதிய படத்தில் நடிக்கிறார் கமல்ஹாசன். இந்தப் படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு துவங்க இருக்கிறதாம்.

இதற்கிடையில் ஹெச்.வினோத் இயக்கத்தில் புதிய படத்தில் கமல் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு நவம்பர் மாதம் தொடங்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

‘துணிவு’ படத்தை முடித்துள்ள வினோத் தற்போது கமல் உடனான படத்திற்காக பணியாற்றி வருகிறாராம். இந்தப் படத்தில் விஜய் சேதுபதியும் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. விரைவில் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ