‘இந்தியன் 2’ படத்தின் படத்தில் மலையாள நடிகர் காளிதாஸ் ஜெயராம் இணைந்துள்ளார்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் ‘இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது.
தற்போது படப்பிடிப்பு தைவான் நாட்டில் நடைபெற்று வருகிறது. ஷங்கர், கமல்ஹாசன் உள்ளிட்ட படக்குழுவினர் இதற்காக தைவானில் டென்ட் அடித்துள்ளனர்.
இந்நிலையில் தற்போது படத்தில் மற்றுமொரு இளம் நடிகர் படப்பிடிப்பில் இணைந்துள்ளார். ஆம், நடிகர் காளிதாஸ் ஜெயராம் ‘இந்தியன் 2’ படத்தில் இணைந்துள்ளதாகத் தெரிகிறது. இயக்குனர் ஷங்கர் உடன் தைவான் நாட்டில் இருக்கும் புகைப்படத்தை அவர் வெளியிட்டுள்ளார்.
விக்ரம் படத்தில் காளிதாஸ் கமல்ஹாசனின் மகனாக நடித்திருந்தார். தற்போது மீண்டும் இந்தக் கூட்டணி இணைந்துள்ளனர்.
‘இந்தியன் 2’ படத்தில் காஜல் அகர்வால், பாபி சிம்ஹா, ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.