நாயகன் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு நீண்ட வருடங்கள் கழித்து தற்போது மணிரத்னம், கமல் கூட்டணியில் தக் லைஃப் திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்து வரும் நிலையில் ஏ ஆர் ரகுமான் இதற்கு இசை அமைக்கிறார். இதில் கமலுடன் இணைந்து நடிகர் சிம்பு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் இவர்களுடன் இணைந்து கௌதம் கார்த்திக், திரிஷா,அசோக் செல்வன், ஐஸ்வர்யா லக்ஷ்மி, ஜோஜு ஜார்ஜ் போன்றோர் நடித்து வருகின்றனர். இந்த படமானது ஆக்ஷன் கலந்த கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகி வருகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பாகவே படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கப்பட்டு ராஜஸ்தான், புதுடெல்லி போன்ற பகுதிகளில் நடைபெற்று வந்தது. அதை தொடர்ந்து புதுச்சேரி பகுதியில் அடுத்த கட்ட படப்பிடிப்பு நடந்த நிலையில் அந்த படப்பிடிப்பில் கமல், சிம்பு, அசோக் செல்வன் ஆகியோர் பங்கேற்றனர். 40 நாட்களில் கிட்டத்தட்ட 60 சதவீதத்திற்கும் மேலான படப்பிடிப்பு முடிந்துள்ளதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் அடுத்த கட்ட படப்பிடிப்பை வெளிநாடு மற்றும் கேரளா போன்ற பகுதிகளில் படமாக மணிரத்னம் திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும் படம் தொடர்பான அடுத்தடுத்த அப்டேட் இனிவரும் நாட்களில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.
கமல், சிம்பு கூட்டணியின் ‘தக் லைஃப்’…. புதுச்சேரி படப்பிடிப்பு நிறைவு…. அடுத்த கட்ட படப்பிடிப்பு எங்கே?
-