எச். வினோத் கடைசியாக அஜித் நடிப்பில் துணிவு திரைப்படத்தை இயக்கியிருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. இதைத் தொடர்ந்து எச்.வினோத், கமல்ஹாசன் நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்க இருக்கிறார். அதன்படி தற்காலிகமாக KH233 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த புதிய படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. இது சம்பந்தமான அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்பே வெளியான போதிலும் படப்பிடிப்பு இன்னும் தொடங்கப்படவில்லை. இதற்கிடையில் கமல்ஹாசன், மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் படத்தில் நடிப்பதற்கு கமிட் ஆகிவிட்டார். மேலும் KH233, தக் லைஃப் ஆகிய இரண்டு படங்களிலும் கமல்ஹாசன் ஒரே நேரத்தில் நடிக்கப் போகிறார் என்றும் செய்திகள் வெளியானது.
தற்போது கிடைத்த தகவலின் படி, கமல்ஹாசன் இந்த இரண்டு படங்களிலும் வெவ்வேறு கெட்டப்பில் நடிக்க இருக்கின்ற காரணத்தால் ஒரே சமயத்தில் இரண்டு படங்களையும் படமாக்கப்பட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவே எச். வினோத் இயக்கவுள்ள KH233 படம் தொடங்குவதில் தாமதம் ஏற்படுவதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எனவே கமல்ஹாசன், மணிரத்னம் இயக்கி வரும் தக் லைஃப் படத்தை முடித்துவிட்டு KH233 படத்திலும் அன்பறிவு மாஸ்டர்கள் இயக்க உள்ள KH237 படத்திலும் நடிப்பார் என்று கூறப்படுகிறது.