விஜய் சேதுபதி நடிப்பில் சமீபத்தில் வெளியாகி வெற்றி நடை போடும் திரைப்படம் தான் மகாராஜா. இந்த படத்தை நித்திலன் சாமிநாதன் இயக்கியிருந்தார். இவர் கடந்த 2017ல் விதார்த், பாரதிராஜா ஆகியோரின் கூட்டணி குரங்கு பொம்மை எனும் திரைப்படத்தை இயக்கியிருந்தார். கிரைம் திரில்லர் கதை களத்தில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அடுத்ததாக ஐந்து வருடங்கள் கழித்து விஜய் சேதுபதி நடிப்பில் மகாராஜா எனும் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்க அஜனீஸ் லோக்நாத் படத்திற்கு இசையமைத்துள்ளார். இதில் விஜய் சேதுபதி தவிர மம்தா மோகன்தாஸ், அனுராக் காஷ்யப், நட்டி நடராஜ் போன்றோர் நடித்துள்ளனர். வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியிருந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகிறது. நாளுக்கு நாள் ரசிகர்களின் ஆதரவும் படத்தின் வசூலும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. மேலும் பல்வேறு தரப்பினரிடையே பாராட்டுகளையும் பெற்று வருகிறது. இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் நீண்ட வருடங்களுக்கு முன்பாக மகாராஜா படத்தின் இயக்குனர் நித்திலன் சாமிநாதன் குறித்து பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். அதாவது நித்திலன் சாமிநாதன் ஆரம்பத்தில் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நாளைய இயக்குனர் என்ற நிகழ்ச்சியில் புன்னகை வாங்கினால் கண்ணீர் இலவசம் எனும் குறும்படத்தை இயக்கி பெயர் பெற்றவர்.
Thanks for believing in me @ikamalhaasan sir.. 🙏🙏🙏
whenever I see this.. it gives me hope and motivation..#Maharaja#VJS50 https://t.co/0SBHLWrij4— Nithilan Saminathan (@Dir_Nithilan) June 16, 2024
நடிகர் கமல்ஹாசன் பல இடங்களில் நிதில நீ இயக்கிய அந்த குறும்படம் குறித்து பேசி அவர் வருங்காலத்தில் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டால் மிகப்பெரிய இயக்குனராக மாறுவார் என்று நித்திலனை பாராட்டி பேசியுள்ளார். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.