Homeசெய்திகள்சினிமாகமல்ஹாசன் நடிக்கும் 'தக் லைஃப்'...... முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு!

கமல்ஹாசன் நடிக்கும் ‘தக் லைஃப்’…… முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு!

-

- Advertisement -

உலக நாயகன் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர் கமல்ஹாசன் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் இந்த வயதிலும் இளம் நடிகர்களுக்கு டஃப் கொடுத்து ஆக்சன் படங்களில் கூட ஃபுல் எனர்ஜியுடன் நடித்து வருகிறார்.கமல்ஹாசன் நடிக்கும் 'தக் லைஃப்'...... முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு!

கடந்த 1987-ல் வெளியான நாயகன் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு நீண்ட வருடங்கள் கழித்து மணிரத்னம், கமல் கூட்டணியில் புதிய படம் உருவாகிறது. தக் லைஃப் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் கமலுடன் இணைந்து ஜெயம் ரவி, துல்கர் சல்மான், திரிஷா, கௌதம் கார்த்திக், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லக்ஷ்மி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஏ ஆர் ரஹ்மான் இதற்கு இசையமைக்கிறார். ஆக்சன் படமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்புகள் சமீபத்தில் தொடங்கப்பட்டதாக படக்குழுவினர் வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்திருந்தனர்.கமல்ஹாசன் நடிக்கும் 'தக் லைஃப்'...... முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு!

இந்நிலையில் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்ததாக தகவல் கிடைத்துள்ளது. இந்த முதல் கட்ட படப்பிடிப்பில் கமல், ஜோஜு ஜார்ஜ் ஆகியோரின் காட்சிகள் படமாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் சிறிய இடைவெளிக்கு பிறகு அடுத்த கட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் நடைபெற உள்ளது என அப்டேட் கிடைத்துள்ளது. இந்த இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் ஜெயம் ரவி, திரிஷா, துல்கர் சல்மான், கௌதம் கார்த்திக் ஆகியோரின் காட்சிகள் படமாக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

MUST READ