உலக நாயகன் என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் கமல்ஹாசன். இவருக்கும் இவரது முன்னாள் மனைவி சரிகாவிற்கும் பிறந்த மகள்கள் தான் ஸ்ருதிஹாசன் மற்றும் அக்சரா ஹாசன். ஸ்ருதிஹாசன் சினிமாவில் நடிகையாகவும் இசையமைப்பாளராகவும் பாடகியாகவும் வலம் வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே. அதேபோல் கமல்ஹாசனின் இளைய மகள் அக்சரா ஹாசனும் அஜித்தின் விவேகம், விக்ரமின் கடாரம் கொண்டான் போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அதற்கு முன்னதாக தனுஷுடன் இணைந்து சமிதாப் எனும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். அடுத்ததாக இவர் நடித்திருக்கும் அக்னி சிறகுகள் திரைப்படம் இன்னும் திரைக்கு வரவில்லை. இந்நிலையில் இவர் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த போது மாதவிடாய் குறித்து பேசி உள்ளார் அக்சரா ஹாசன்.
அவர் பேசியதாவது, “பெண்கள் பலரும் மாதவிடாய் என்பது பற்றி பொது இடங்களில் பேச தயங்குகிறார்கள். அந்த அளவிற்கு மாதவிடாய் என்பது மோசமான விஷயம் இல்லை. அது ஒரு சாதாரண விஷயம். இயற்கையானது. அதன் மூலமாக தான் இந்த உலகிற்கு ஒரு உயிர் வருகிறது. ஆனால் சிலர் இதனை தீட்டு என்று சொல்கிறார்கள். அது பார்ப்பவர்களின் பார்வையை பொறுத்தது. அவர்களுக்கு இது குறித்த புரிதல் இல்லை என்று தான் நான் சொல்வேன்” என்று தெரிவித்துள்ளார்.
- Advertisement -