spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஎன்னுடைய ரசிகர், என்னுடைய நண்பருக்கு படம் பண்றது பெருமை தானே... பூரித்துப் பேசிய கமல்!

என்னுடைய ரசிகர், என்னுடைய நண்பருக்கு படம் பண்றது பெருமை தானே… பூரித்துப் பேசிய கமல்!

-

- Advertisement -

தற்போது இந்திய அளவில் அதிகம் பேசப்படும் (Most Wanted) இயக்குனராக வலம் வரும் லோகேஷ் கனகராஜ். தற்போது விஜய் நடிப்பில் லியோ படத்தை இயக்கியிருக்கிறார்.

லியோ படத்தை அடுத்து ரஜினிகாந்துடன் கூட்டணி அமைக்க இருக்கிறார் லோகேஷ். இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். தீவிர கமல் ரசிகரான லோகேஷ் ரஜினி படத்தை இயக்குவது குறித்து பல கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வந்தன.

we-r-hiring

இந்நிலையில் அது குறித்து தெளிவுபடுத்தி உள்ளார் நடிகர் கமலஹாசன். சமீபத்தில் துபாயில் நடைபெற்ற சைமா விருது விழாவில் பேசிய கமல், ” இதற்கு முன்னரே கமல் 50 விழாவில் என்னையும் போல ஒரு நட்பு இதற்கு முன்னால் இருந்திருக்காது இனிமேலும் இருக்கப் போவதில்லை என்று கூறியிருக்கிறேன். என்னுடைய ரசிகர்  என்னுடைய நண்பருக்கு படம் பண்றது எனக்கு தானே பெருமை.

சினிமா ஒரு கிரிக்கெட் விளையாட்டு போல தான், இருந்தாலும் அங்கிருந்து பந்து வரும் போது அதை அடித்து விளையாடுவேன் அது தொழில். ஆனால் காலை வாரிவிட நினைக்க மாட்டேன்” என்று பேசி உள்ளார். அவரது இந்த பேச்சு ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்று வருகிறது

MUST READ