spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஇந்திரா காந்தியாக கங்கனா ரனாவத் நடித்துள்ள 'எமர்ஜென்சி'..... ரிலீஸ் குறித்த அப்டேட்!

இந்திரா காந்தியாக கங்கனா ரனாவத் நடித்துள்ள ‘எமர்ஜென்சி’….. ரிலீஸ் குறித்த அப்டேட்!

-

- Advertisement -

பிரபல பாலிவுட் நடிகை கங்கணா ரணாவத் நடித்து இயக்கியுள்ள “எமர்ஜென்சி” திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் மகள்தான் இந்திரா காந்தி. இவர் 1980 முதல் 1984 ஆம் ஆண்டு வரை இந்தியாவின் பிரதமராக பதவி வகித்தார். 1984 ஆம் ஆண்டில் தன்னுடைய சொந்த பாதுகாவலர்களால் துப்பாக்கியால் சுடப்பட்டு கொல்லப்பட்டார்.

we-r-hiring

ஜூன் 25 ,1975 அன்று உள்நாட்டு பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திரா காந்தி அவசரநிலை பிரகடனத்தை அறிவித்தார்.
இந்த அவசர நிலை பிரகடனத்தின் போது பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களின் ஆதரவாளர்களுக்கும் காவல்துறையினருக்கும் மோதல் ஏற்பட்டு பெருமளவு இழப்பிற்கு இட்டுச் சென்றது. அந்த அவசரநிலை பிரகடனத்தின் போது ஏற்பட்ட சம்பவங்களை மட்டுமே அடிப்படையாக வைத்து கங்கனா ரணாவத் “எமர்ஜென்சி”படத்தை இயக்கி தானே இந்திரா காந்தி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சஞ்சய் காந்தியாக விஷக் நாயர் நடித்துள்ளார்.

ரித்தேஷ் ஷா இப்படத்திற்கு திரைக்கதை வசனம் எழுதியுள்ளார். ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்து விட்ட நிலையில் தற்போது படத்தின் வெளியிட்டு தேதியை அறிவிக்கும் வகையில் ஒரு டீசர் ஒன்றினை கங்கனா ரணாவத் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதன்படி இப்படம் வரும் நவம்பர் மாதம் 24 ஆம் தேதி நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

மேலும் அவருடைய டிவிட்டர் பதிவில் “பாதுகாவலரா? சர்வாதிகாரியா? நம் தேசத்தின் தலைவர் தன் மக்களின் மீது போர் தொடுத்த வரலாற்றின் இருண்ட காலத்தை காணுங்கள்” என்றும் பதிவிட்டுள்ளார்.

MUST READ