Homeசெய்திகள்சினிமாதேர்தலில் வென்றால் நடிப்புக்கு முழுக்கு... நடிகை கங்கனா உறுதி...

தேர்தலில் வென்றால் நடிப்புக்கு முழுக்கு… நடிகை கங்கனா உறுதி…

-

தமிழில் தாம்தூம் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை கங்கனா ரணாவத். இத்திரைப்படம் மூலம் அவர் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார். இதைத் தொடர்ந்து அவர் தமிழில் அடுத்தடுத்து படம் நடிக்கவில்லை. நீண்ட இடைவெளிக்கு பிறகு அவர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் வெளியான தலைவி திரைப்படத்தில் நடித்திருந்தார். மறைந்த முதலமைச்சர் ஜெ ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி, இத்திரைப்படம் எடுக்கப்பட்டது. இத்திரைப்படத்தில் அவர் ஜெ ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும், இத்திரைப்படம் கங்கனா ரணாவத்திற்கு, ஒரு கம்பேக்காக அமைந்தது. இதைத் தொடர்ந்து அவர் தமிழில் இறுதியாக நடித்திருந்த திரைப்படம் தான் சந்திரமுகி இரண்டாம் பாகம். பி.வாசு இயக்கத்தில் வெளியான இத்திரைப்படத்தில் லாரன்ஸூடன் இணைந்து ஜோடியாக நடித்திருந்தார். இதைத் தொடர்ந்து அவர் பாலிவுட்டில் அடுத்தடுத்து திரைப்படங்களில் கமிட்டாகி வந்தார். அவரது நடிப்பில் எமர்ஜென்சி திரைப்படம் உருவாகி வருகிறது.

தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற தேர்தலில், கங்கனா ரணாவத் பாஜக சார்பில் போட்டியிடுகிறார். பாஜக வேட்பாளராக களமிறங்கியுள்ள கங்கனா ரணாவத் தீவிர பரப்புரையில் ஈடுபட்டார். இந்நிலையில், தேர்தலில் வெற்றி பெற்றால் நடிக்க மாட்டேன் என்று கங்கனா ரணாவத் தெரிவித்துள்ளார். இது அவரது ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.

MUST READ