இயக்குனர் சிவா கடந்த 2011 ஆம் ஆண்டு கார்த்தி நடிப்பில் வெளியான சிறுத்தை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர். முதல் படமே சூப்பர் டூப்பர் ஹிட் என்பதால் சிறுத்தை சிவா என்று அழைக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து அஜித் நடிப்பில் வீரம், வேதாளம், விஸ்வாசம், விவேகம் என அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்தார். கடைசியாக ரஜினி நடிப்பில் இவர் இயக்கியிருந்த அண்ணாத்த படம் எதிர்பார்த்த அளவில் வெற்றியை தரவில்லை. இந்நிலையில் சிறுத்தை சிவா அடுத்ததாக சூர்யா நடிப்பில் கங்குவா திரைப்படத்தை இயக்கி வருகிறார். பிரம்மாண்ட பட்ஜெட்டில் 3D தொழில்நுட்பத்தில் இப்படம் உருவாகி வருகிறது. ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் தயாரிப்பில் தயாராகி வரும் இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இப்படம் 10க்கும் அதிகமான மொழிகளில் வெளியாக இருக்கிறது.
வரலாற்று சரித்திர படமாக உருவாகி வரும் கங்குவா படத்தின் மீதான எதிர்பார்ப்பு
ஆரம்பத்தில் இருந்தே அதிகமாக இருந்தது வந்தது. சில மாதங்களுக்கு முன்பு படத்தின் கிளிம்ஸ் வெளியாகி எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. அதைத்தொடர்ந்து அடுத்தடுத்த போஸ்டர்களை பட குழுவினர் வெளியீட்டு அசத்தினர். மேலும் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் கங்குவா படத்தின் ரிலீசுக்கு முன்பே கங்குவா 2 படம் சம்பந்தமான அப்டேட் வெளியாகி உள்ளது. அதாவது கங்குவா முதல் பாகத்தை இயக்கும் போதே
கங்குவா 2 படத்திற்கான சில காட்சிகளை படமாக்கி விட்டாராம் சிறுத்தை சிவா. சிறுத்தை சிவா, கங்குவா படத்திற்கு பிறகு அஜித் நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்க உள்ளாராம். எனவே அதனை முடித்த பின் கங்குவா 2 படத்தின் பணிகளை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.