Homeசெய்திகள்சினிமாதீப்பொறி பறக்கும் 'கங்குவா' புதிய போஸ்டர் வெளியீடு!

தீப்பொறி பறக்கும் ‘கங்குவா’ புதிய போஸ்டர் வெளியீடு!

-

நடிகர் சூர்யா தற்போது கங்குவா படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தை பிரபல இயக்குனர் சிறுத்தை சிவா இயக்க ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது. தேவி ஸ்ரீ பிரசாத் இதற்கு இசையமைக்கிறார்.தீப்பொறி பறக்கும் 'கங்குவா' புதிய போஸ்டர் வெளியீடு! மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் மிகப்பிரமாண்டமாக உருவாகி வரும் இந்த படம் 3D தொழில்நுட்பத்தில் உருவாகி வருகிறது. வரலாற்றுப் பின்னணியில் பீரியட் படமாக தயாராகி வரும் இந்த படம் பத்துக்கும் அதிகமான மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் சூர்யாவுக்கு வில்லனாக பாபி தியோல் நடிக்க மற்றொரு வில்லனாக நட்டி நடராஜ் நடித்துள்ளார். மேலும் திஷா பதானி, கோவை சரளா, யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானல் ராஜமுந்திரி போன்ற இடங்களின் அடர்ந்த காட்டுப் பகுதியில் படமாக்கப்பட்டது. படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்த நிலையில் இந்த படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இதற்கிடையில் முன்னோட்ட வீடியோ, அடுத்தடுத்த போஸ்டர்கள் ஆகியவற்றை பட குழுவினர் வெளியீட்டு கவனம் பெற்றனர்.

அடுத்ததாக கங்குவா படத்தின் டீசர் இன்று மாலை 4.30 மணி அளவில் வெளியாக இருப்பதாக படக்குழுவினர் நேற்று அறிவித்திருந்தனர். தற்போது நடிகர் சூர்யா தனது சமூக வலைதள பக்கத்தில் தீப்பொறி பறக்கும் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு எதிர்பார்ப்பை தூண்டியுள்ளார்.

MUST READ