காந்தாரா சாப்டர் 1 படத்தின் ட்ரெய்லர் அப்டேட் வெளியாகியுள்ளது.
கன்னட சினிமாவில் ரிஷப் ஷெட்டியின் நடிப்பிலும், இயக்கத்திலும் ‘காந்தாரா’ எனும் திரைப்படம் வெளியானது. தெய்வ நம்பிக்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் பல தொழில்நுட்ப காரணங்களால் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்து ரூ.400 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து மிகப் பெரிய சாதனை படைத்தது. இதனை அடுத்து ‘காந்தாரா சாப்டர் 1’ எனும் திரைப்படம் தற்போது உருவாகி வருகிறது. அதாவது இந்த படமானது காந்தாரா படத்தின் பிரீக்குவலாக உருவாகி வருகிறது. முதல் பாகத்தை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் இதனை தயாரிக்க ரிஷப் ஷெட்டி படத்தை இயக்கி, நடித்துள்ளார். ருக்மினி வசந்த் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அஜனீஸ் லோக்நாத் இதன் இசையமைப்பாளராக பணியாற்றியுள்ளார். பிரம்மாண்டமாக தயாராகி வரும் இந்த படமானது வருகின்ற அக்டோபர் 2ஆம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம், ஆங்கிலம் என பல மொழிகளில் உலகம் முழுவதும் திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது.
இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஆரம்பத்திலிருந்தே அதிகமாக இருந்து வந்த நிலையில் திரையரங்குகளில் இப்படத்தை கொண்டாட ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர். அதே சமயம் இப்படம் ஐமேக்ஸ் திரைகளிலும் திரையிடப்பட உள்ளது. இந்நிலையில் வருகின்ற செப்டம்பர் 22ஆம் தேதி மதியம் 12.45 மணிக்கு இந்த படத்தின் டிரைலர் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.