- Advertisement -
கேஜிஎஃப் திரைப்படத்தின் மூலம் உலகம் முழுவதும் பிரபலம் ஆனவர் நடிகர் யஷ். குறுகிய வட்டத்தில் இருந்த கன்னட சினிமாவை உலகம் முழுக்க கொண்டு சேர்த்த பெருமை நடிகர் யஷூக்கு உண்டு. கேஜிஎஃப் 1 மற்றும் 2 இரண்டு பாகங்களும் மாபெரும் வெற்றி பெற்றன. இதில் இரண்டாம் உலகம் முழுவதும் வெளியாகி ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து, இதுவரை கன்னட சினிமாவில் யாரும் செய்யாத சாதனையை செய்தது. இதைத் தொடர்ந்து யஷ் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு அண்மையில் வெளியானது.

கே.வி.என். புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தை பிரபல மலையாள இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்குகிறார். இத்திரைப்படம கோவாவில் போதைப் பொருள் நடத்தும் கும்பலை மையப்படுத்தி உருவாக உள்ளது. ஆக்ஷன் நிறைந்த ஒரு படமாக இது தயாராகி வருகிறது. டாக்சிக் என படத்திற்கு தலைப்பு வைக்கப்பட்டு உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அடுத்த ஆண்டு ஏப்ரல் 10-ம் தேதி இத்திரைப்படம் வெளியாகும் என படக்குழு அறித்திருந்தது.




