Homeசெய்திகள்சினிமாகார்த்தி, நலன் குமாரசாமி கூட்டணியின் புதிய படம்..... பூஜை வீடியோ வெளியீடு!

கார்த்தி, நலன் குமாரசாமி கூட்டணியின் புதிய படம்….. பூஜை வீடியோ வெளியீடு!

-

கார்த்தி, நலன் குமாரசாமி கூட்டணியில் உருவாகி வரும் புதிய படத்தின் பூஜை வீடியோ வெளியாகி உள்ளது.கார்த்தி, நலன் குமாரசாமி கூட்டணியின் புதிய படம்..... பூஜை வீடியோ வெளியீடு!

நடிகர் கார்த்தி ஜப்பான் படத்திற்கு பிறகு நலன் குமாரசாமி இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக கிரித்தி ஷெட்டி நடிக்கிறார். மேலும் இவர்களுடன் இணைந்து சத்யராஜ், ராஜ்கிரண் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இதற்கு இசை அமைக்கிறார். இந்த படத்தின் பூஜை சில மாதங்களுக்கு முன்பாக நடைபெற்ற நிலையில் தற்போது பூஜை வீடியோவை பட குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த படத்தின் பூஜையின் நடிகர் சூர்யாவும் கலந்து கொண்டார் என்பது தெரிய வந்துள்ளது. தற்போது இந்த பூஜை வீடியோவின் மூலம் நடிகர் சூர்யாவும் இந்த பூஜையில் கலந்து கொண்டது தெரிய வந்துள்ளது.

மேலும் கார்த்தியின் 27 வது படமாக உருவான இந்த படம் கார்த்தியின் 26வது படமாக ரிலீஸ் ஆகவுள்ளது. ஏற்கனவே படத்தின் படப்பிடிப்புகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் இந்த படத்திற்கு வா வாத்தியாரே என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

MUST READ