சித்தார்த்தின் மிஸ் யூ பட ட்ரைலரை நடிகர் கார்த்தி வெளியிடுகிறார்.
நடிகர் சித்தார்த் கடைசியாக சங்கர் மற்றும் கமல்ஹாசன் கூட்டணியில் வெளியான இந்தியன் 2 திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அடுத்தது ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார் சித்தார்த். இதற்கிடையில் இவர் மிஸ் யூ எனும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் சித்தார்த்துடன் இணைந்து ஆஷிகா ரங்கநாத், பால சரவணன் கருணாகரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இந்த படத்தை ராஜசேகர் இயக்கியுள்ளார். செவன் மில்லியன் பெர் செகண்ட் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. ஜிப்ரான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். கே ஜி வெங்கடேஷ் இதற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். ரொமான்டிக் காதல் கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படம் வருகின்ற நவம்பர் 29ஆம் நாளில் திரைக்கு வர தயாராகி வருகிறது. இதற்கிடையில் இந்த படத்தில் இருந்து அடுத்தடுத்த போஸ்டர்களும் டீசர் வெளியாகி கவனம் பெற்றுள்ளது. மேலும் இந்த படத்தின் டிரைலர் இன்று (நவம்பர் 23) மாலை 5 மணி அளவில் வெளியாக உள்ளது. இந்த ட்ரெய்லரை நடிகர் கார்த்தி வெளியிடப் போகிறார் என்று படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.