Homeசெய்திகள்சினிமாப்ரீ ரிலீஸ் பிசினஸில் 150 கோடி ரூபாயை தட்டி தூக்கிய கார்த்தியின் படங்கள்!

ப்ரீ ரிலீஸ் பிசினஸில் 150 கோடி ரூபாயை தட்டி தூக்கிய கார்த்தியின் படங்கள்!

-

கார்த்தி கடந்த 2020 ஆம் ஆண்டு சர்தார், விருமன், பொன்னியின் செல்வன் பாகம் 1 உள்ளிட்ட தொடர் வெற்றி படங்களை கொடுத்திருந்தார்.

இந்த ஆண்டிலும் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.

அந்த வகையில் கார்த்தி தற்போது தனது 25வது படமான ஜப்பான் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் குக்கூ, ஜோக்கர், ஜிப்சி உள்ளிட்ட படங்களை இயக்கிய ராஜு முருகன் இயக்கியுள்ளார். ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்ய ஜிவி பிரகாஷ் இசை அமைக்கிறார். இப்படம் தீபாவளியை முன்னிட்டு திரைக்கு வர இருக்கிறது.

இதைத்தொடர்ந்து கார்த்தி தனது 26 ஆவது படத்தை சூது கவ்வும் படத்தை இயக்கிய நலன் குமாரசாமி இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்புகள் வருகின்ற ஆகஸ்ட் மாதம் தொடங்கி அக்டோபர் மாதத்தில் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் கார்த்தி தனது 27 ஆவது படத்தை 96 பட இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில் நடிக்க உள்ளார். சூர்யாவின் 2D என்டர்டைன்மென்ட் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க உள்ளது. பி சி ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்ய உள்ளார். இந்த படத்தில் கார்த்தி உடன் இணைந்து அரவிந்த்சாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இதன் படப்பிடிப்பு நவம்பர் மாதம் தொடங்க இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகிறது.

இவ்வாறாக இரவு பகல் பாராமல் கடினமாக உழைத்து வருகிறார் நடிகர் கார்த்தி. அதனால் இவரின் படங்கள் ரிலீசுக்கு முன்பாகவே 150 கோடி ரூபாய் வரை வியாபாரம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஓடிடி தளங்கள் ,சேட்டிலைட் சேனல்கள், ஆடியோ உரிமைகள் உள்ளிட்ட முக்கிய விநியோகஸ்தர்களிடம் இருந்து வியாபார அழைப்புகளும் ஒப்பந்தங்களும் செய்யப்பட்டு வருகின்றன.

MUST READ