Homeசெய்திகள்சினிமா96 பட இயக்குனருடன் இணையும் கார்த்தி..... உறுதி செய்த பிரபல ஒளிப்பதிவாளர்!

96 பட இயக்குனருடன் இணையும் கார்த்தி….. உறுதி செய்த பிரபல ஒளிப்பதிவாளர்!

-

நடிகர் கார்த்தி தற்போது ராஜு முருகன் இயக்கத்தில் ஜப்பான் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் வருகின்ற தீபாவளியை முன்னிட்டு வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் கார்த்தியின் அடுத்த படத்தை 96 பட இயக்குனர் பிரேம்குமார் இயக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இப்படத்தை சூர்யாவின் 2D என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் கார்த்தி உடன் இணைந்து அரவிந்த்சாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்திற்கு பி சி ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்ய இருக்கிறார். இதனை ஸ்ரீராம் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். அதில், ” எனது அடுத்த திட்டத்தினை அற்புதமான காதல் கதையான 96 படத்தை இயக்கிய இயக்குனர் பிரேம்குமாருடன் பணிபுரிய உள்ளேன். அதில் கார்த்தி மற்றும் அரவிந்த்சாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். கோவிந்த் வசந்தா இசை அமைக்க உள்ளார். 2D என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் ராஜசேகரன் தயாரிக்க உள்ளார். இதுகுறித்து விரைவில் 2D என்டர்டைன்மென்ட் நிறுவனம் அறிவிக்கும்” என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் இந்த படத்தின் பிரீ ப்ரோடுக்ஷன் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் எனவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில் கார்த்தி தனது 26வது படத்தை நலன் குமாரசாமி இயக்கத்தில் நடிக்க இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகியிருந்தது. அந்தப் படத்தினை முடித்துவிட்டு கார்த்தி தனது 27 வது படப்பிடிப்பை தொடங்குவார் என்று கூறப்படுகிறது.

MUST READ