Homeசெய்திகள்சினிமாகவின், யுவன், இளன் கூட்டணியின் புதிய படம்.... டைட்டில் லுக் வெளியீடு!

கவின், யுவன், இளன் கூட்டணியின் புதிய படம்…. டைட்டில் லுக் வெளியீடு!

-

நடிகர் கவின் டாடா படத்தின் வெற்றிக்கு பிறகு புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்த படத்தை ப்யார் பிரேமா காதல் படத்தை இயக்கிய இளன் எழுதி இயக்குகிறார். இப்படம் ஏற்கனவே ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாக இருந்த திரைப்படம் ஆகும். ஒரு சில காரணங்களால் இந்த படத்தில் கவின் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார்.கே எழிலரசு இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தற்போது இந்த படத்தின் டைட்டில் லுக் வெளியாகி உள்ளது. இந்த படத்திற்கு ஸ்டார் என்று தலைப்பிடப்பட்டுள்ளது. மேலும் படத்தின் சிறப்பு முன்னோட்டம் வருகின்ற ஆகஸ்ட் 31இல் வெளியாகும் என்று அந்த போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

MUST READ