Homeசெய்திகள்சினிமாகவின் ரசிகர்களே.... 'கிஸ்' முதல் பாடல் ரிலீஸ் டேட் தெரியுமா?

கவின் ரசிகர்களே…. ‘கிஸ்’ முதல் பாடல் ரிலீஸ் டேட் தெரியுமா?

-

- Advertisement -

கவின் நடிக்கும் கிஸ் படத்தின் முதல் பாடல் ரிலீஸ் குறித்து அப்டேட் கிடைத்துள்ளது.கவின் ரசிகர்களே.... 'கிஸ்' முதல் பாடல் ரிலீஸ் டேட் தெரியுமா?

நடிகர் கவின் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவர் ஆவார். இவரது நடிப்பில் தற்போது மாஸ்க் போன்ற பல படங்கள் உருவாகி வருகின்றன. கடைசியாக இவரது நடிப்பில் ப்ளடி பெக்கர் திரைப்படம் வெளியானது. இதற்கிடையில் இவர் நடன இயக்குனர் சதீஷ் கிருஷ்ணன் இயக்கத்தில் கிஸ் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் கவினுக்கு ஜோடியாக அயோத்தி பட நடிகை ப்ரீத்தி அஸ்ரானி நடித்துள்ளார். கவின் ரசிகர்களே.... 'கிஸ்' முதல் பாடல் ரிலீஸ் டேட் தெரியுமா?ரொமான்டிக் காதல் கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தினை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க ஜென் மார்ட்டின் இதற்கு இசை அமைக்கிறார். ஹரிஷ் கண்ணன் இதன் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே நிறைவடைந்த நிலையில் படத்திலிருந்து அடுத்தடுத்த போஸ்டர்களும், டீசரும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்தது இந்த படம் மார்ச் மாதத்தில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது.கவின் ரசிகர்களே.... 'கிஸ்' முதல் பாடல் ரிலீஸ் டேட் தெரியுமா? ஆனால் இதுவரை ரிலீஸ் குறித்த எந்தவித அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்நிலையில் இந்த படத்தின் முதல் பாடல் 2025 மே மாதம் 9ஆம் தேதி அல்லது 16ஆம் தேதி வெளியாகும் என புதிய தகவல் கிடைத்துள்ளது. இனிவரும் நாட்களில் மற்ற அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ