Homeசெய்திகள்சினிமாகவின் நடிக்கும் 'கிஸ்' படத்தின் ரிலீஸ் எப்போது?

கவின் நடிக்கும் ‘கிஸ்’ படத்தின் ரிலீஸ் எப்போது?

-

- Advertisement -

கவின் நடிக்கும் கிஸ் படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.கவின் நடிக்கும் 'கிஸ்' படத்தின் ரிலீஸ் எப்போது?

சின்னத்திரையில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற மெகாதொடரின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் கவின். இவர் வெள்ளித்திரையிலும் என்ட்ரி கொடுத்து லிஃப்ட், டாடா போன்ற வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார். தற்போது இவரது நடிப்பில் மாஸ்க் போன்ற படங்கள் உருவாகி வருகின்றன. அந்த வகையில் இவர், நடன இயக்குனர் சதீஷ் கிருஷ்ணன் இயக்கத்தில் கிஸ் எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் கவினுக்கு ஜோடியாக பிரீத்தி அஸ்ராணி நடித்துள்ளார். இந்த படத்தை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. ஜென் மார்டின் இதற்கு இசையமைக்கிறார். ஹரிஷ் கண்ணன் இந்த படத்தின் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். ரொமான்டிக் காதல் கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே நிறைவடைந்த நிலையில் தற்போது பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.கவின் நடிக்கும் 'கிஸ்' படத்தின் ரிலீஸ் எப்போது? அதன்படி இந்த படத்தில் இருந்து டீசரும், முதல் பாடலும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. இனிவரும் நாட்களில் அடுத்தடுத்த பாடல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த படமானது 2025 ஜூன் மாதத்தில் திரைக்கு வரும் என லேட்டஸ்ட் அப்டேட் வெளிவந்துள்ளது. விரைவில் ரிலீஸ் தேதி படக்குழுவினர் சார்பில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ