Homeசெய்திகள்சினிமாகவின் நடிக்கும் 'ஸ்டார்' படத்தின் ரிலீஸ் எப்போது?

கவின் நடிக்கும் ‘ஸ்டார்’ படத்தின் ரிலீஸ் எப்போது?

-

கவின் நடிக்கும் ஸ்டார் படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

நடிகர் கவின், சரவணன் மீனாட்சி என்ற தொடரின் மூலம் ரசிகர்களுக்கு பரிட்சயமானவர். அதைத் தொடர்ந்து சில படங்களில் சிறுசிறு கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வந்தார். பின்னர் நட்புன்னா என்னன்னு தெரியுமா என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார்.கவின் நடிக்கும் 'ஸ்டார்' படத்தின் ரிலீஸ் எப்போது? கடந்தாண்டு கணேஷ் கே பாபு இயக்கத்தில் வெளியான டாடா எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார் கவின். இந்தப் படம் நடிகர் கவினை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. இந்த படம் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. இதைத் தொடர்ந்து கவின் நடன இயக்குனர் சதீஷ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். அதேசமயம் 2018 இல் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான பியார் பிரேமா காதல் படத்தின் இயக்குனர் இளன் இயக்கத்தில் ஸ்டார் என்ற படத்தில் நடித்து வருகிறார். கவின் நடிக்கும் 'ஸ்டார்' படத்தின் ரிலீஸ் எப்போது?இப்படமானது ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பிலும் யுவன் சங்கர் ராஜாவின் இசையிலும் உருவாகி வருகிறது. இந்த படத்திற்கு கே எழிலரசு ஒளிப்பதிவு செய்கிறார். இதில் கவின் உடன் இணைந்து ஆதிதி பொஹங்கர், ப்ரீத்தி முகுந்தன், கீதா கைலாசம், மாறன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பாக படத்தின் முதல் பாடலை பட குழுவினர் வெளியிட்டிருந்தனர். கவின் நடிக்கும் 'ஸ்டார்' படத்தின் ரிலீஸ் எப்போது?அதைத் தொடர்ந்து முன்னோட்ட வீடியோவும் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில் இந்த படம் ஏப்ரல் மாதத்தில் திரையிடப்பட திட்டமிடப்பட்டுள்ளது. இருப்பினும் நாடாளுமன்ற தேர்தல் காரணமாக படத்தில் ரிலீஸ் தேதி உறுதி செய்யப்படாமல் இருக்கிறது. தேர்தல் தேதியை அறிவித்த பின்னர் ஸ்டார் படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ