நடிகர் கவின் ஆரம்பத்தில் சின்னத்திரையில் பணியாற்றி வந்தவர். பின்னர் வெள்ளி திரையில் சில படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். அதைத் தொடர்ந்து நட்புன்னா என்னன்னு தெரியுமா என்ற படத்தில் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். சின்னத்திரையில் இருக்கும் போதே ஏராளமான ரசிகர்களை சேகரித்து வைத்த கவின், வெள்ளி திரைக்கு வந்த பிறகும் லிப்ட், டாடா போன்ற படங்களின் மூலம் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தையே திரட்டினார். தற்போது பல படங்களில் பிஸியாக நடித்து வரும் கவின் பியார் பிரேமா காதல் பட இயக்குனர் இளன் இயக்கத்தில் ஸ்டார் எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் கவினுடன் இணைந்து ஆதிதி பொஹங்கர், பிரீத்தி முகுந்தன், கீதா கைலாசம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை ரைஸ் ஈஸ்ட் நிறுவனம் தயாரித்துள்ள நிலையில் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் சிவகார்த்திகேயன் ரெமோ திரைப்படத்தில் லேடி கெட்டப்பில் நடித்து ரசிகர்களின் கவனத்தை பெற்றது போல் நடிகர் கவினும் இந்த படத்தில் லேடி கெட்டப்பில் வைத்துள்ளார். சமீபத்தில் இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது. இதற்கிடையில் ஸ்டார் திரைப்படத்தின் அடுத்தடுத்த பாடல்கள் வெளியான நிலையில் இப்படமானது மே 10ஆம் தேதி வெளியாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.
இதில் நடிகர் கவின் , நடிகராக வேண்டும் என்ற கனவுடன் வாழ்ந்து வர ஒரு கட்டத்தில் நடிகனாக மாறிவிடுகிறார் என்பது போல் காட்டப்படுகிறது. ஆனால் இதற்கிடையில் கவின் வாழ்வில் ஏற்படும் கஷ்டங்கள், காதலி விட்டுச் செல்வது போன்றவை எமோஷனலாக காட்டப்பட்டுள்ளது. இந்த ட்ரெய்லர் தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருவது மட்டுமல்லாமல் ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகப்படுத்தி உள்ளது. எனவே டாடா திரைப்படத்தை போல் இந்த படமும் நடிகர் கவினுக்கு நல்ல பெயரை பெற்று தரும் என்று நம்பப்படுகிறது.