Homeசெய்திகள்சினிமாவிஜய் காரை நொறுக்கிய கேரள ரசிகர்கள்!

விஜய் காரை நொறுக்கிய கேரள ரசிகர்கள்!

-

நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இதற்கு இசையமைக்கிறார். விஜய் காரை நொறுக்கிய கேரள ரசிகர்கள்!படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கிறார். டைம் டிராவல் சம்பந்தமான கதைக்களத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் விஜயுடன் இணைந்து சினேகா, லைலா, பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கப்பட்ட தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் சென்னை, ரஷ்யா போன்ற பகுதிகளில் படமாக்கப்பட்டு வருகிறது. அதே சமயம் இந்த படத்தில் விஜய் பாடல் ஒன்றை பாடியுள்ளார். திரிஷா படத்தில் பாடல் ஒன்றுக்கு நடனமாடியுள்ளார். இது போன்ற அப்டேட்டுகள் தொடர்ந்து வெளியாகி வரும் நிலையில் படத்தின் கிளைமேக்ஸ் காட்சிகளை படமாக்க பட குழுவினர் திருவனந்தபுரம் சென்றுள்ளனர். அப்போது நடிகர் விஜய் கேரளாவிற்கு சென்ற நிலையில், ரசிகர்கள் பலரும் விஜயை காண திரண்டு வந்தனர்.விஜய் காரை நொறுக்கிய கேரள ரசிகர்கள்! கிட்டத்தட்ட 14 ஆண்டுகளுக்குப் பிறகு விஜய் கேரளாவிற்கு சென்றுள்ளார். இவரை காண ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக படையெடுத்து வந்தனர். அப்போது கூட்ட நெரிசலில் விஜயின் கார் கண்ணாடி நொறுக்கப்பட்டு சேதம் அடைந்தது. இது தொடர்பான புகைப்படங்களும் வீடியோ படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

MUST READ