ஜெயம் ரவி பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் இவர், ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் சைரன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் ஏப்ரல் 28ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. அதே சமயம் நயன்தாராவுடன் இணைந்து இறைவன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். ஆக்சன் திரைப்படமாக உருவாக்கி உள்ள இந்த படம் வருகின்ற ஆகஸ்ட் 25ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.
அதைத்தொடர்ந்து வாமனன் என்றென்றும் புன்னகை படத்தை இயக்கிய ஐ அகமது இயக்கத்தில் ஜன கன மன திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். மேலும் இயக்குனர் எம் ராஜேஷ் இயக்கத்திலும் ஒரு புதிய படத்தில் நடிக்கிறார். மேலும் அடங்கமறு படத்தை இயக்கிய கார்த்திக் தங்கவேல் இயக்கத்திலும் நடிக்க இருக்கிறார்.
இவ்வாறு பல படங்களில் பிஸியாக நடித்து வரும் ஜெயம் ரவி, கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகி இருந்தது.
இந்தப் படத்தில் நித்யா மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படம் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தின் தயாரிப்பிலும் ஏ ஆர் ரகுமான் இசையிலும் உருவாக உள்ளது.
இந்நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பு வருகின்ற ஜூலை மாதம் தொடங்கும் என்று தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் கிருத்திகா உதயநிதி, வணக்கம் சென்னை, காளி, பேப்பர் ராக்கெட் உள்ளிட்ட படங்களை இயக்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
- Advertisement -


