குபேரா படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.
தனுஷ் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் திரைப்படம் தான் குபேரா. இந்த படம் தனுஷின் 51 வது படமாகும். இதனை பிரபல தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கியிருக்கிறார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க தேவி ஸ்ரீ பிரசாத் இதற்கு இசையமைத்துள்ளார். நிகேத் பொம்மி ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். அரசியல் -திரில்லர் ஜானரில் உருவாகும் இந்தப் படத்தில் தனுஷுடன் இணைந்து நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி இருக்கும் இந்த படம் வருகின்ற ஜூன் 20ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் திரைக்கு வர தயாராகி வருகிறது. இதற்கிடையில் இந்த படத்தில் இருந்து அடுத்தடுத்த பாடல்களும், டீசரும் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன. இதற்கிடையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்று முடிந்துள்ளது. இந்நிலையில் இன்று (ஜூன் 3) நடைபெற இருந்த குபேரா படத்தின் சென்சார் ஒரு சில தவிர்க்க முடியாத தொழில்நுட்ப காரணங்களால் நாளை ( ஜூன் 4) ஒத்திவைக்கப்பட்டு இருப்பதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.