Homeசெய்திகள்சினிமா'குபேரா' டீசர் ரெடி.... அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட படக்குழு!

‘குபேரா’ டீசர் ரெடி…. அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட படக்குழு!

-

- Advertisement -

குபேரா படத்தின் டீசர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.'குபேரா' டீசர் ரெடி.... அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட படக்குழு!

நடிகர் தனுஷின் 51வது படமாக உருவாகியிருக்கும் திரைப்படம் தான் குபேரா. இந்த படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் சேகர் கக்முலா இயக்கியுள்ளார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேஷன்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க தேவி ஸ்ரீ பிரசாத் இதற்கு இசையமைத்திருக்கிறார். நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோர் தனுஷுடன் இணைந்து நடித்திருக்கின்றனர். தேவா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தனுஷ், இப்படத்தில் வித்தியாசமான தோற்றத்தில் நடித்துள்ளார். இந்த படமானது மும்பை தாராவியை மையமாக வைத்து அரசியல் திரில்லர் ஜானரில் எடுக்கப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது.

we-r-hiring

எனவே மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி வரும் இப்படம் 2025 ஜூன் மாதம் 20ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கிறது. இதற்கிடையில் இந்த படத்தில் இருந்து ஏற்கனவே கிளிம்ப்ஸ் வீடியோவும் , தனுஷ் குரலில் முதல் பாடலும் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அடுத்தது இப்படத்தின் டீசருக்காக ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த நிலையில் நாளை (மே 25) இந்த படத்தின் டீசர் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

MUST READ