Homeசெய்திகள்சினிமாகுஷி படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

குஷி படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

-

குஷி படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா நடிப்பில் உருவான குஷி திரைப்படம் கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. மைத்ரி மூவி மேக்கப் நிறுவனம் தயாரித்த இந்த படத்தை சிவா நிர்வனா இயக்கியிருந்தார். இதில் விஜய் தேவரகொண்டா, சமந்தாவுடன் இணைந்து ரோகிணி, லட்சுமி, சரண்யா பொன்வண்ணன், சச்சின் ஹெடேக்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஹேசம் அப்துல் வாகப் இதற்கு இசை அமைத்துள்ளார். தெலுங்கில் உருவாகியுள்ள இந்த படம் தமிழ், மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் டப் செய்யப்பட்டு பான் இந்தியா திரைப்படமாக வெளியிடப்பட்டது. எளிமையான காதல் கதையை மையமாக வைத்து ஃபேமிலி என்டர்டயினர் படமான இந்தப் படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்றது. அந்த வகையில் உலக அளவில் 80 கோடிக்கு மேல் வசூல் செய்து பிளாக்பஸ்டர் ஹிட் ஆகியுள்ளது. இந்நிலையில் இப்படம் வருகின்ற அக்டோபர் 1ஆம் தேதி நெட்பிலிக்ஸ் ஓ டி டி தளத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ