Homeசெய்திகள்சினிமாஎம்புரான் படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு தொடக்கம்

எம்புரான் படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு தொடக்கம்

-

- Advertisement -

எம்புரான் படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது. 

கடந்த 2019 ஆம் ஆண்டு மோகன்லால் நடிப்பில் வெளியான திரைப்படம் லூசிபர். மலையாள திரை உலகில் ஸ்டார் நடிகர்களில் ஒருவரான பிரித்விராஜ் சுகுமாரன் இதனை இயக்கியிருந்தார். பிரித்திவிராஜ் இயக்கிய முதல் திரைப்படமே பிளாக் பஸ்டர் ஹிட் ஆனது. அதன்படி 200 கோடிக்கு மேல் வசூல் செய்த முதல் மலையாள திரைப்படம் என்ற பெயரை பெற்றது. இந்த படத்தை ஆசிர்வாத் சினிமாஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இதில் மோகன் நாளுடன் இணைந்து விவேக் ஓபராய் , மஞ்சு வாரியர், டோவினோ தாமஸ் மற்றும் பலர் நடித்திருந்தனர்.

லூசிபர் படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து லூசிபர் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக பிரித்விராஜ் ஏற்கனவே தெரிவித்திருந்தார். மேலும் லைக்கா நிறுவனம் ‘எம்புரான்’ என்ற தலைப்பிடப்பட்டுள்ள லூசிபர் 2 படத்தை படத்தை தயாரிக்க இருப்பதாக அறிவித்திருந்தது. இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பான் இந்திய அளவில் வெளியாக உள்ளது.

இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு இங்கிலாந்தில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது. இந்நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி இருக்கிறது. இதை நடிகரும், படத்தின் இயக்குநருமான பிருத்விராஜ் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

MUST READ