ஜி.வி. பிரகாஷ் நடிக்கும் இடி முழக்கம் படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது.தமிழ் சினிமாவில் வெயில் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜி.வி. பிரகாஷ். இவர் பல பெரிய ஹீரோக்களின் படங்களுக்கு இசையமைப்பதோடு மட்டுமல்லாமல் அடுத்தடுத்த படங்கள் ஹீரோவாக நடித்து வருகிறார். அந்த வகையில் கடைசியாக இவரது நடிப்பில் கிங்ஸ்டன் திரைப்படம் வெளியானது. இது தவிர பிளாக்மெயில், மெண்டல் மனதில் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார் ஜி.வி. பிரகாஷ். இதற்கிடையில் இவர், பிரபல இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் இடி முழக்கம் எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்தை ஸ்கை மேன் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க என் ஆர் ரகுநாதன் இதற்கு இசையமைத்திருக்கிறார். இந்த படத்தில் ஜி.வி. பிரகாஷுடன் இணைந்து காயத்ரி, சரண்யா பொன்வண்ணன், எம்.எஸ். பாஸ்கர் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே நிறைவடைந்த நிலையில் இப்படம் ரிலீஸ் ஆகாமல் நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த படத்தில் இருந்து அடுத்தடுத்த போஸ்டர்களும், முதல் பாடலும் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
இந்நிலையில் இந்த படத்தில் இருந்து கானா விளக்கு மயிலே எனும் இரண்டாவது பாடல் இன்று (ஏப்ரல் 12) மாலை 600 மணி அளவில் வெளியாகும் எனவும் இந்த பாடலை விஜய் சேதுபதி மற்றும் ஆரிய ஆகிய இருவரும் இணைந்து வெளியிடுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
- Advertisement -