Homeசெய்திகள்சினிமாமிகவும் எதிர்பார்க்கப்படும் 'கைதி 2' படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் இதுதான்!

மிகவும் எதிர்பார்க்கப்படும் ‘கைதி 2’ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் இதுதான்!

-

- Advertisement -

கைதி 2 படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.மிகவும் எதிர்பார்க்கப்படும் 'கைதி 2' படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் இதுதான்!

கடந்த 2019 ஆம் ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘கைதி’ திரைப்படம் வெளியானது. கார்த்தி நடிப்பில் வெளியான இந்த படத்தில் நரேன், ஜார்ஜ் மரியான், அர்ஜுன் தாஸ் ஆகியோரும் நடித்திருந்தனர். அதிரடி ஆக்சன் படமாக வெளியான இந்த படம் ரசிகர்களுக்கு தரமான விருந்து படைத்தது. அதே சமயம் சாம் .சி.எஸ் – இன் படத்திற்கு பக்கபலமாக அமைந்தது. எனவே இன்று வரையிலும் இந்த படம் ரசிகர்களின் ஃபேவரைட் படங்களில் ஒன்றாக திகழ்கிறது. மிகவும் எதிர்பார்க்கப்படும் 'கைதி 2' படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் இதுதான்!இந்நிலையில் இந்த படத்தின் அடுத்த பாகம் எப்போது உருவாகும்? என்று ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். அதாவது எல்.சி.யு- வின் தொடக்கப்புள்ளியாக இருந்த ‘கைதி’ படத்தின் இரண்டாம் பாகத்தில் ரோலக்ஸ் (சூர்யா) மற்றும் தில்லி (கார்த்தி) ஆகிய இருவரும் மோதும் காட்சிகள் எப்படி இருக்கும் என்பதை ரசிகர்கள் இப்பொழுதே கற்பனை செய்து பார்க்க தொடங்கிவிட்டார்கள். ஆனால் ஒரு சில தவிர்க்க முடியாத காரணங்களால் இந்த படமானது தள்ளிப்போய்க் கொண்டே இருந்தது. மேலும் லோகேஷ் கனகராஜ் தற்போது அவர் ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தில் பிசியாக இருப்பதால் இதற்குப் பிறகுதான் கைதி 2 திரைப்படம் உருவாகும் என்று சொல்லப்படுகிறது. சமீபத்தில் இந்த படம் கைவிடப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், இதுதான் லோகேஷ் கனகராஜின் அடுத்த படமாக இருக்கும் என பல தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.மிகவும் எதிர்பார்க்கப்படும் 'கைதி 2' படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் இதுதான்! இந்நிலையில் இதன் கூடுதல் தகவல் என்னவென்றால், இந்த படத்தின் பிரீ ப்ரோடக்ஷன் பணிகள் இன்று முதல் (அக்டோபர் 25) தொடங்க இருப்பதாக சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது. கைதி 2 திரைப்படத்தை ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க சாம். சி.எஸ் இந்த படத்திற்கு இசையமைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இனிவரும் நாட்களில் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் குறித்த விவரங்கள் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.

MUST READ