Homeசெய்திகள்சினிமா'மதராஸி' படத்தின் ரிலீஸ் குறித்து வெளியான புதிய தகவல்!

‘மதராஸி’ படத்தின் ரிலீஸ் குறித்து வெளியான புதிய தகவல்!

-

- Advertisement -

மதராஸி படத்தின் ரிலீஸ் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது.'மதராஸி' படத்தின் ரிலீஸ் குறித்து வெளியான புதிய தகவல்!

சிவகார்த்திகேயனின் 23 வது படமாக உருவாகி வரும் திரைப்படம் தான் மதராஸி. இந்த படத்தை பிரபல இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கி வருகிறார். இந்த படத்தை ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இதற்கு இசை அமைக்கிறார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து விக்ராந்த், டான்சிங் ரோஸ் சபீர், பிஜு மேனன், ருக்மினி வசந்த் மற்றும் பலர் நடிக்கின்றனர். பான் இந்திய அளவில் கமர்சியல் படமாக உருவாகும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. அதன்படி இந்த படத்தின் படப்பிடிப்புகளும் ஏற்கனவே தொடங்கி தூத்துக்குடி சென்னை போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் குறித்த புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி ஏற்கனவே இந்த படத்தினை 2025 ஆகஸ்ட் மாதத்தில் திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டிருந்தது.'மதராஸி' படத்தின் ரிலீஸ் குறித்து வெளியான புதிய தகவல்! ஆனால் ரஜினியின் கூலி திரைப்படம் 2025 ஆகஸ்ட் 14 அன்று திரைக்கு வரும் என சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன. எனவே மதராஸி திரைப்படத்தை அதற்கு முன்பாக ஜூலை மாதத்தில் வெளியிட இருப்பதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இனிவரும் நாட்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ