மார்ஷல் படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் கார்த்தியின் 29 ஆவது படமாக உருவாகி வரும் திரைப்படம் தான் மார்ஷல். இந்த படத்தை ‘டாணாக்காரன்’ படத்தின் இயக்குனர் தமிழ் இயக்குகிறார். இந்தப் படத்தை ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க சாய் அபியங்கர் இதற்கு இசை அமைக்கிறார். இந்த படமானது கடல் சம்பந்தமான கதைக்களத்தில் உருவாகி வருகிறது. மேலும் இப்படம் இரண்டு பாகங்களாக உருவாக இருக்கிறது என்றும் பேச்சு அடிபடுகிறது. இந்த படத்தில் கார்த்தியுடன் இணைந்து கல்யாணி பிரியதர்ஷன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இது தவிர வடிவேலு, ஆதி ஆகியோரும் நடிப்பதாக சொல்லப்படுகிறது.
ஏற்கனவே இந்த படம் தொடர்பான பூஜை சிறப்பாக நடந்து முடிந்த நிலையில் படப்பிடிப்புகளும் ராமேஸ்வரத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. அதன்படி பிரம்மாண்டமான செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடத்தப்பட்டது. தற்போது இதன் கூடுதல் தகவல் என்னவென்றால் இதன் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டதாகவும், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு வருகின்ற நவம்பர் 15 ஆம் தேதி (நாளை) திருச்சியில் தொடங்கும் எனவும் நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அடுத்தது நடிகர் கார்த்தி வருகின்ற நவம்பர் 19இல் படப்பிடிப்பில் இணைவார் என்று கூறப்படுகிறது. இனிவரும் நாட்களில் மற்ற தகவல்கள் வெளியாகும் என நம்பப்படுகிறது.

நடிகர் கார்த்தி, வா வாத்தியார், சர்தார் 2 ஆகிய படங்களையும் கைவசம் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


