சிக்கந்தர் படத்தின் வசூல் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது.
பிரபல தமிழ் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் தீனா, ரமணா, கஜினி, துப்பாக்கி, கத்தி ஆகிய படங்களை இயக்கி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். இவரது இயக்கத்தில் கடந்த மார்ச் 30ஆம் தேதி ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வந்த படம் தான் சிக்கந்தர். சல்மான் கான் நடிப்பில் வெளியான இந்த படத்தினை சாஜித் நதியத்வாலா தயாரித்திருந்தார். பிரட்டாம் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். இப்படத்தில் சல்மான் கானுடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, சத்யராஜ், காஜல் அகர்வால் மற்றும் பலர் நடித்திருந்தனர். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இருப்பினும் இந்த படம் தற்போது வரை ரூ 141.15 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. இதற்கிடையில் இந்த படம் வெளியிட்டிருக்கும் முன்பாகவே இணையத்தில் லீக் ஆனதால் இனிவரும் நாட்களிலும் இந்த படத்தின் வசூல் அதிகரிக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
மேலும் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ், சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்கி வரும் மதராஸி திரைப்படத்தின் மூலம் தரமான கம்பேக் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.