spot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா'கேப்டன் மில்லர்' படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட தனுஷ்!

‘கேப்டன் மில்லர்’ படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட தனுஷ்!

-

- Advertisement -

தென்னிந்திய திரை உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கும் ‘கேப்டன் மில்லர்‘ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் தனுஷ் உடன் இணைந்து பிரியங்கா மோகன், சந்திப் கிஷன், நிவேதிதா சதீஷ், ஜான் கொக்கேன், சிவராஜ்குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.இந்தப் படம் சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பிலும் ஜி.வி பிரகாஷ் இசையிலும் உருவாகி வருகிறது.

தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இப்படம் இந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

we-r-hiring

இந்நிலையில் நடிகர் தனுஷ் இந்த படம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் விரைவில் வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த படத்தின் டீசர் வருகின்ற ஜூலை மாதம் வெளியாக இருப்பதாகவும் தற்போதைய தகவலில் தெரியவந்துள்ளது.

MUST READ