Homeசெய்திகள்சினிமாதனுஷின் கேப்டன் மில்லர் படப்பிடிப்பை நிறைவு செய்த கன்னட சூப்பர் ஸ்டார்!

தனுஷின் கேப்டன் மில்லர் படப்பிடிப்பை நிறைவு செய்த கன்னட சூப்பர் ஸ்டார்!

-

- Advertisement -

கன்னட ஸ்டார் நடிகர் சிவராஜ் குமார் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் தன்னுடைய பகுதிகளை நிறைவு செய்துள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

ராக்கி, சாணிக் காயிதம் ஆகிய படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் தற்போது கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார்.

we-r-hiring

இந்தப் படத்தில் பிரியங்கா மோகன், சந்திப் கிஷன், நிவேதிதா சதீஷ், சிவராஜ் குமார், ஜான் கொக்கேன் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். ஜிவி பிரகாஷ் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். இப்படம் சத்தியஜோதி பிலிம்ஸ் நிறுவனம் படத்தைத் தயாரிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கேப்டன் மில்லர் திரைப்படம் மூன்று பாகங்களாக உருவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

கன்னடத்தில் பெரிய ஸ்டார் நடிக்கராக வலம் வரும் சிவராஜ் குமார் கேப்டன் மில்லர் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் சிவராஜ்குமார் படத்தில் தன்னுடைய பகுதிகளை நிறைவு செய்துள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். அவர் படக்குழுவினர் உடன் காணப்படும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
சாணிக் காயிதம் படத்தின் கூடுத அப்டேட்கள் தனுஷ் பிறந்தநாள் வரும் ஜூலை மாதத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ