Homeசெய்திகள்சினிமா'லியோ' படத்தின் அடுத்த அப்டேட் ஆன் தி வே!

‘லியோ’ படத்தின் அடுத்த அப்டேட் ஆன் தி வே!

-

மாஸ்டர் படத்தில் வெற்றிக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் லியோ. 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். இதில் விஜயுடன் இணைந்து திரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மிக பிரம்மாண்டமாகவும் மிகுந்த எதிர்பார்ப்புகளுடனும் இப்படம் உருவாகியுள்ளது. வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி திரைக்கு வர முழு வீச்சில் படம் தயாராகி வருகிறது.
சமீபத்தில் விஜயின் ஃபர்ஸ்ட் லுக், ஃபர்ஸ்ட் சிங்கிள், சஞ்சய்தத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது.

செய்திகளை உடனுக்குடன் WhatsApp செயலியில் பெற

தற்போது ஆக்சன் கிங் அர்ஜுனின் பிறந்த நாளான இன்று அர்ஜுனின் பர்ஸ்ட் லுக் வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

MUST READ