- Advertisement -
ஹரிஸ் கல்யாண் மற்றும் அட்டக்கத்தி தினேஷ் இணைந்து நடித்துள்ள லப்பர் பந்து திரைப்படத்தின் முதல் தோற்றம் வெளியானது.

ஹரிஷ் கல்யாண் தென்னிந்திய திரை உலகில் முன்னணி இளம் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர். இவர் தற்போது தோனி என்டர்டைன்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் எல் ஜி எம் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண் உடன் இணைந்து நதியா , இவானா, யோகி பாபு, தீபா உள்ளிட்டோர் நடித்தனர். இத்திரைப்படம் கடந்த ஜீலை மாதம் வெளியானது. மேலும் டீசல், பார்க்கிங், நூறு கோடி வானவில், உள்ளிட்ட படங்களையும் கைவசம் வைத்துள்ளார். அதேசமயம் ஹரிஷ் கல்யாண், லப்பர் பந்து எனும் திரைப்படத்திலும் நடித்து முடித்துள்ளார். பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க தமிழரசன் பச்சை முத்து இயக்குகிறார்.



