Homeசெய்திகள்சினிமாலக்கி பாஸ்கர் படத்தின் முதல் பாடல் ரெடி... அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்...

லக்கி பாஸ்கர் படத்தின் முதல் பாடல் ரெடி… அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்…

-

லக்கி பாஸ்கர் படத்தின் முதல் பாடலுக்கான பணிகள் முடிவு பெற்றதாக படத்தின் இசை அமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் துல்கர் சல்மான். இவர் மலையாள நடிகராக இருந்தாலும், இவரது திரைப்படங்களுக்கு தென்னிந்திய மொழிகளில் அதிக வரவேற்பு கிடைப்பது வழக்கமாகும். அவரது நடிப்பில் வௌியான சீதா ராமம் திரைப்படம் ஏகபோக வரவேற்பை பெற்றது. இதையடுத்து அவர் நடித்த கிங் ஆஃப் கோதா திரைப்படம் எதிர்பார்த்த வெற்றி அடையவில்லை. இதைத் தொடர்ந்து துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி இருக்கும் புதிய திரைப்படம் தான் லக்கி பாஸ்கர்

வெங்கி அட்லுரி இத்திரைப்படத்தை இயக்கி உள்ளார். இவர் தனுஷை வைத்து வாத்தி படம் இயக்கியவர் ஆவார். படப்பிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது. படத்தின் பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் படத்தை சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் ஃபார்ச்சூன் போர் சினிமாஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. இதில் துல்கர் சல்மான் உடன் இணைந்து மீனாட்சி சவுத்ரி நடிக்கிறார். ஜிவி பிரகாஷ் இதற்கு இசை அமைக்கிறார்.

லக்கி பாஸ்கர் படத்தின் போஸ்டர் மற்றும் டீசர் ஏற்கனவே வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இத்திரைப்படத்தின் முதல் பாடல் நிறைவு செய்யப்பட்டு, படத்தின் தயாரிப்பாளரிடம் ஒப்படைத்து விட்டதாக இசை அமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தெரிவித்துள்ளார். அதேபோல தங்கலான் படத்தின் முதல் பாடலும் நிறைவு பெற்றதாக அவர் அறிவித்துள்ளார். விரைவில் இரண்டு பாடல்களும் வெளியாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

MUST READ