Homeசெய்திகள்சினிமாதிணறித் திணறி ரூ.100 கோடியை தொட்ட 'மதராஸி'.... ஏமாற்றத்தில் ரசிகர்கள்!

திணறித் திணறி ரூ.100 கோடியை தொட்ட ‘மதராஸி’…. ஏமாற்றத்தில் ரசிகர்கள்!

-

- Advertisement -

மதராஸி திரைப்படம் ரூ.100 கோடியை தொட்டுள்ளது.திணறித் திணறி ரூ.100 கோடியை தொட்ட 'மதராஸி'.... ஏமாற்றத்தில் ரசிகர்கள்!

சிவகார்த்திகேயனின் 23வது படமாக உருவாகி இருந்த மதராஸி திரைப்படம் கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. இந்த படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்க ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. அனிருத் இதற்கு இசை அமைத்திருந்தார். இப்படம் திரைக்கு வருவதற்கு முன்பாக மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் திரைக்கு வந்த பின்னர் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. சிவகார்த்திகேயன் இந்த படத்தில் முழுக்க முழுக்க ஆக்சன் ஹீரோவாக மிரட்ட, வித்யூத் ஸ்டைலிஷ் வில்லனாக கலக்கிருந்தார். ஏ.ஆர். முருகதாஸ், கத்தி, துப்பாக்கி பட பாணியை இந்த படத்தின் மூலம் கையில் எடுத்திருந்தாலும் அவருடைய கஜினி பட அளவிற்கு இப்படம் ரசிகர்களை கவரவில்லை. அந்த வகையில் விறுவிறுப்பாக நகரும் இந்த படத்தில் திரைக்கதை ஸ்ட்ராங்காக அமைக்கப்படவில்லை. இதன் காரணமாக இந்த படம் பெரிய அளவு கூட்டத்தை கவர்ந்திழுக்கவில்லை. திணறித் திணறி ரூ.100 கோடியை தொட்ட 'மதராஸி'.... ஏமாற்றத்தில் ரசிகர்கள்!அதேசமயம் சமீபகாலமாக பல படங்கள் ட்ரோல் செய்யப்பட்டு வந்தாலும் ‘மதராஸி’ திரைப்படம் அதிலிருந்து தப்பித்துள்ளது என்றே சொல்லலாம். ஆனாலும் உலகம் முழுவதும் ரூ.100 கோடியை திணறித் திணறி தான் வசூல் செய்துள்ளது. சிவகார்த்திகேயனின் ‘அமரன்’ திரைப்படமானது ரூ.300 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்த நிலையில் ‘மதராஸி’ திரைப்படம் அதையும் தாண்டி விடும் என்று நம்பிய ரசிகர்களுக்கு இப்படம் ஏமாற்றத்தை தந்துள்ளது.

MUST READ