Homeசெய்திகள்சினிமா'மதராஸி' படக்குழு வெளியிட்ட புதிய அறிவிப்பு.... கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

‘மதராஸி’ படக்குழு வெளியிட்ட புதிய அறிவிப்பு…. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

-

- Advertisement -

மதராஸி படக்குழு புதிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.'மதராஸி' படக்குழு வெளியிட்ட புதிய அறிவிப்பு.... கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

சிவகார்த்திகேயனின் 23 வது படமாக உருவாகி வரும் திரைப்படம் தான் மதராஸி. இந்த படத்தை பிரபல இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியுள்ளார். ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க அனிருத் இதற்கு இசையமைத்திருக்கிறார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து பிஜு மேனன், விக்ராந்த், வித்யூத் ஜம்வால், சபீர் கல்லாரக்கல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். ருக்மினி வசந்த் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். இந்த படம் காதல் கலந்த ஆக்சன் திரில்லர் படமாக உருவாகியுள்ளது. ஏற்கனவே படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்த நிலையில் 2025 செப்டம்பர் 5ஆம் தேதி இப்படம் திரைக்கு வர தயாராகி வருகிறது. அதன்படி படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 'மதராஸி' படக்குழு வெளியிட்ட புதிய அறிவிப்பு.... கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!இந்நிலையில் வருகிற ஆகஸ்ட் 24ஆம் தேதி இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறும் என்றும் அதே நாளில் ட்ரெய்லர் வெளியாகும் என்றும் படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த தகவல் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை தந்துள்ளது. ‘அமரன்’ படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஆரம்பத்திலிருந்தே அதிகமாக இருந்து வந்த நிலையில் இந்த படமும் சிவகார்த்திகேயனுக்கு மிகப்பெரிய வெற்றி படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ