மாதவன், ஜோதிகாவின் சைத்தான் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
மாதவன் ,ஜோதிகா ஆகிய இருவரும் இணைந்து கடந்த 2001 இல் வெளியான டும் டும் டும் திரைப்படத்தில் நடித்திருந்தனர். அதைத் தொடர்ந்து கிட்டத்தட்ட 22 வருடங்களுக்குப் பிறகு சைத்தான் எனும் பாலிவுட் திரைப்படத்தில் இணைந்துள்ளனர். சூப்பர் நேச்சுரல் திரில்லர் ஜானரில் உருவாகியிருந்த இந்த படத்தில் மாதவன், ஜோதிகா உடன் இணைந்து அஜய் தேவ்கன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் ஜான்கி போதிவாலா, அங்கத் ராஜ் உள்ளிட்டோரும் நடித்திருந்தனர். இந்த படத்தை விகாஸ் பாஹ்ல் இயக்கியிருந்தார். இதனை தேவ்கன் ஃபிலிம்ஸ் நிறுவனமும் பனோரமா ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்திருந்த நிலையில் இந்த படத்திற்கு அமித் திரிவேதி இசையமைத்திருந்தார். சுதாகர் ரெட்டி யகந்தி ஒழிப்பதிவு செய்து இருந்தார். இந்தப் படம் கடந்த மார்ச் 8ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்தது.
#Shaitaan | May 3 on NETFLIX.
— Christopher Kanagaraj (@Chrissuccess) April 30, 2024

இந்நிலையில் இந்த படம் வருகின்ற மே 3ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் இந்த படம் இந்தியில் மட்டுமே வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.