நடிகை மடோனா செபாஸ்டியன் லியோ படத்தில் இணைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
நடிகர் விஜய், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்போது லியோ படத்தில் நடித்து வருகிறார். மாஸ்டர் படத்தை அடுத்து இந்தக் கூட்டணி இந்தப் படத்தில் அர்ஜுன், சஞ்ஜய் தத், திரிஷா மிஸ்கின், மன்சூர் அலி
கான், மேத்யூ தாமஸ், சாண்டி, அபிராமி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் படத்தைத் தயாரிக்கின்றனர்.

நாளுக்கு நாள் படத்தில் இருந்து அப்டேட்கள் குவிந்து வருகின்றன. தற்போது இந்தப் படத்தில் நடிகை மடோனா செபாஸ்டியனும் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது
சமீபத்தில் கிட்டத்தட்ட 2000 நடனக் கலைஞர்களை வைத்து இப்படத்தின் பாடல் படப்பிடிப்பு நடந்தது. சென்னையில் படப்பிடிப்பை நடத்தியதை தொடர்ந்து படக்குழு ஹைதராபாத் செல்லவுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மடோனா படப்பிடிப்பில் இணைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இப்படம் அக்டோபர் 19 ஆம் தேதி லியோ உலகம் முழுவதும் ரிலீஸ் ஆக இருப்பதாகக் கூறப்படுகிறது.