spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாலிஸ்ட் போய்க்கிட்டே இருக்கே… லோகேஷ்- விஜய் கூட்டணியின் லியோ படத்தில் குவியும் பிரபலங்கள்!

லிஸ்ட் போய்க்கிட்டே இருக்கே… லோகேஷ்- விஜய் கூட்டணியின் லியோ படத்தில் குவியும் பிரபலங்கள்!

-

- Advertisement -

விஜய் நடிக்கும் ‘லியோ‘ படத்தில் இன்னும் பல பிரபலங்கள் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்போது லியோ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் அர்ஜுன், சஞ்ஜய் தத், திரிஷா மிஸ்கின் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் படத்தைத் தயாரிக்கின்றனர்.

we-r-hiring

ஒரு மாஸ் கேங்ஸ்டர் படமான இந்த படம் வருகின்ற அக்டோபர்
19ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இந்த படத்தில் விஜயின் மகளாக பிக்பாஸ் பிரபலம் ஜனனி நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் ஹாலிவுட் படமான டெனட் திரைப்படத்தில் நடித்திருந்த டென்சில் ஸ்மித் என்பவரும் லியோ படத்தில் நடித்திருப்பதாகவும், 4 நாட்கள் மட்டுமே இவரின் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதுமட்டுமில்லாமல் கைதி படத்தில் நடித்திருந்த நரேன், அர்ஜுன் தாஸ், ஜார்ஜ் மரியான் மற்றும் விக்ரம் படத்தில் நடித்திருந்த பகத் பாஸில், வசந்தி உள்ளிட்டோரும் நடித்திருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. மேலும் இவர்களுடன் லோகேஷ் கனகராஜ் இந்த படத்தில் கேமியாவாக நடிப்பார் எனவும் கூறப்படுகிறது. இப்படி எக்கச்சக்க பிரபலங்கள் படத்தில் இணைந்திருப்பதாகக் கூறப்படுவது படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் எகிறச் செய்துள்ளது.

MUST READ